உக்ரைன்
மீதான
ரஷ்ய படையெடுப்பு
உக்ரைன் நாட்டு மக்களை உறக்கவிடாமல் செய்து வருகிறது. அதுபோக இங்குள்ள சுமார் 16,000 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் ரஷ்ய படையின் நாசக்கார குண்டுகளுக்கு மத்தியில் உயிர் பயத்துடன் தவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு படைகளை ரஷ்ய படை துவம்சம் செய்து வரும் சூழலில் இன்னும் சில மணி நேரத்தில்
கீவ் நகர்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போரை விரும்பாத உக்ரைன் நாட்டு மக்களோ அந்நாட்டு வெள்ளை மாளிகை முன்பு சமாதான கொடியுடன் குவிந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவின் படைகள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தனியொரு ஆளாக உக்ரேனிய நபர் எதிர்த்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியா அரசுகள் அறிவித்தது. அதன்படி, வான் தாக்குதல் எதிர்ப்பு-ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை, எஸ்டோனியா உக்ரைனுக்கு வழங்க முன் வந்துள்ளது. இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பரிந்துரையை ஏற்று, பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர்
புடின்
முடிவெடுத்ததையடுத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கிற்கு அனுப்புவதாக ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
எங்களுக்கேவா? அதிரடி நடவடிக்கை எடுத்த ரஷ்யா!
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தால் மட்டுமே உக்ரைனில் போர் பதட்டம் குறையும். ஆனால், இரு நாட்டின் பேச்சு வார்த்தை அறிவிப்புகளுக்கு மத்தியில் ரஷ்ய படையினர் உக்ரைனின் முக்கிய நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.