கீவ்: ‛ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை’ என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமாகப் பேசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறி வருகிறது. இதனால், பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம்.
நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். ரஷ்ய படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement