நேற்றைய கடும் வீழ்ச்சியில் இருந்து மீட்சி கண்ட இந்திய பங்குச்சந்தைகள் <!– நேற்றைய கடும் வீழ்ச்சியில் இருந்து மீட்சி கண்ட இந்திய பங்… –>

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் நேற்றுக் கடும் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தை இன்று ஓரளவுக்கு மீட்சியடைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக நேற்று வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தை நிப்டி 815 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன. இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதல் பங்குச்சந்தைகள் படிப்படியாகச் சரிவில் இருந்து மீட்சி கண்டன.

முற்பகல் 10:48 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1630 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து 160 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 493 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 741 ஆக இருந்தது. மோட்டார் வாகனத் தொழில், உருக்கு, நிலக்கரி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 8 விழுக்காடு வரை உயர்ந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.