3 படம் மூலம் இயக்குநர் ஆனவர் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர் முதல் முறையாக காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார்.
முசாபிர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை தயாரிக்கவும் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. வீடியோ பற்றி
ஐஸ்வர்யா
கூறியதாவது,
முசாபிர் பாடல் தான் என்னை தேடி வந்தது. இந்த கனெக்ஷன் தவறாகப் போகாது என்பதை உணர்ந்தேன்.
இது எனக்கு புதிது தான். ஆனாலும் இது போன்று மேலும் பல ப்ராஜெக்டுகளை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
படங்கள் மட்டும் என்று இருக்காமல் பாடல் வீடியோக்களையும் இயக்க தயாராக இருக்கிறார் ஐஸ்வர்யா.
முசாபிர் வேலை முடிந்து பேக்கப் சொல்லிவிட்டதை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
காதல் கணவரான தனுஷை பிரிந்த கையோடு முசாபிர் வீடியோவை இயக்கியிருக்கிறார். தென்னந்திய திரையுலக பிரபலத்தின் மகளுக்கும், மும்பை பையனுக்கும் இடையேயான காதல் தான் முசாபிர். அந்த கதை ஐஸ்வர்யாவின் வாழ்க்கையோடு ஒத்துப் போகும்.
மீண்டும் சேரும் தனுஷ், ஐஸ்வர்யா: ரசிகர்கள் கவலை
மும்பை பையனுக்கு பதில் தமிழ் பையன், அவ்வளவு தான் வித்தியாசம். வேதனையான இந்த நேரத்தில் அவர் காதல் பாடல் வீடியோவை இயக்கியிருப்பது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.