பேரூராட்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் வாக்கு சதவிகிதம் என்ன?

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில்’ மொத்தம்12,607 பதவிகளுக்கு’ கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல்’ பலமுனைப் போட்டியாகத் தோன்றினாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவியது.

இறுதியாக’ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதன் ஒருபகுதியாக’ 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சியிலும் கூட திமுக மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.

அதிமுகவும், பாஜக கட்சிகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அதிமுகவை பொறுத்தவரையில், வெற்றி வாய்ப்பை இழந்ததோடு, இது அதிர்ச்சிக்குரிய தோல்வியாக அமைந்தது

இந்நிலையில் தற்போது’ கட்சி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளிவந்துள்ளது.

பேரூராட்சி பொருத்தவரையில்’ மொத்தம் 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 196 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஒரு இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் தூத்துக்குடி மாவட்டம், முதல்நிலை பேரூராட்சியின் 12-வது உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை’ தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.  

பேரூராட்சி வார்டு உறுப்பினர் கட்சி வாரியாக வாக்கு சதவீதம் விவரம்.

திமுக – 41.91 சதவிகிதம்

அதிமுக – 25.56 சதவிகிதம்

பாஜக – 4.30 சதவிகிதம்

காங்கிரஸ் – 3.85 சதவிகிதம்

பாட்டாளி மக்கள் கட்சி – 1.56 சதவிகிதம்

அமமுக – 1.35 சதவிகிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1.34 சதவிகிதம்

நாம் தமிழர் கட்சி – 0.80 சதவிகிதம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.61 சதவிகிதம்

தேமுதிக – 0.55 சதவிகிதம்

இந்திய கம்யூனிஸ்ட் – 0.44 சதவிகிதம்

மதிமுக – 0.36 சதவிகிதம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.14 சதவிகிதம்

மனிதநேய மக்கள் கட்சி – 0.14 சதவிகிதம்

மக்கள் நீதி மய்யம் – 0.07 சதவிகிதம்

பகுஜன் சமாஜ் – 0.04 சதவிகிதம்

புதிய தமிழகம் – 0.04 சதவிகிதம்

இந்திய ஜனநாயகக் கட்சி – 0.01 சதவிகிதம்

சமத்துவ மக்கள் கட்சி – 0.01 சதவிகிதம்

இதில் வழக்கம்போல, திமுக 41.91 சதவிகித வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக’ அதிமுக 25.56 சதவிகித வாக்குகளும், பாஜக, 4.30 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதில் குறிப்பிட்த்தக்க விஷயம் என்னவென்றால்’ தமிழகத்தில் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கென தனி மவுசு உண்டு. குறிப்பாக நிறைய விவசாயிகள்’ இன்றும் கை சின்னத்துக்குத்தான் வாக்களிக்கின்றனர். அதேபோல’ இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக மிக சொற்பமான வாக்குகளை பெற்று வந்தன.

ஆனால் நடந்த முடிந்த பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி’ பாஜக 3வது இடத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.