சொந்த நாட்டுக்குத் திரும்பும் விமானப் பயணிகளிடம் அதிகக் கட்டணம் பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உக்ரைன் ஏர்லைன்ஸ் மறுத்துள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து நாடு திரும்புவதற்கு உக்ரைன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகக் கட்டணம் பெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை டெல்லியில் உள்ள விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எப்போது வேண்டுமானாலும் இலாபம் ஈட்டலாம் என்றும், இப்போது அதற்கான நேரம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் பிள்ளைகளைத் திருப்பி அழைத்து வர இயன்றவரை தாங்கள் முயல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
டாட்டாவின் ஏர் இந்தியா விமானத்தில் உள்ளதைப் போலவே ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரை தங்கள் கட்டணம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.