முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சவடியில் கள்ள ஓட்டு தொடர்பாக திமுக மற்றும் அதிமுக வினரிடையே பிரச்சினை எழுந்தது.
அந்த பிரச்டனை தொடர்பான புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. தொண்டரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தண்டையார்பேட்டை காவல்துறையினர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு ஒன்றுமில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை எனக்கூறிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.