ரஜினியின் சொல்ல மறந்த காதல் கதை..!

நடிகர்
ரஜினி
இயக்குனர் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் தான் நடித்தார் ரஜினி. பின்பு பல படங்களில் கமலுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் ரஜினி தனக்கு இதுவே போதும் என்று நினைத்தாராம்.

ஆனால் நடிகர் கமலின் அறிவுரையை கேட்டு ரஜினி தனியே நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் தான் அவருக்கு பெரும் புகழும் கூடியது. உறங்ககூட நேரமில்லாமல் ரஜினி பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவந்தார்.

இனி இதுபோல் நடக்காது..இதுதான் கடைசி : தனுஷ்

ஒரு கட்டத்தில் ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வர துவங்கினார். எங்கு சென்றாலும் ரஜினியின் பெயர் தான் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் ரஜினியை போட்டிக்கான வந்தவர் தான்
லதா
.

நடிகர் மகேந்திரனின் உறவினரான லதா அவர் மூலம் ரஜினியை பேட்டிகாணும் வாய்ப்பை பெற்றார். அப்போதுதான் ரஜினியும் லதாவும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அதுவரை கல்யாணம், காதல் இதில் இரண்டிலும் ஆர்வம் காட்டாத ரஜினி லதாவை பார்த்தவுடன் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

அந்த பேட்டி முடிவடைவதற்குள் லதாவை ரஜினி காதலிக்க துவங்கினார். பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தங்கள் காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல நினைத்த இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். எனவே தன் குருநாதரான இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் லதாவை அழைத்து சென்ற ரஜினி தன் திருமண செய்தியை சொன்னார்.

அதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியில் கே.பாலசந்தர் இருவரையும் வாழ்த்தி இனிதான் உனக்கு பொறுப்பு வரும் என்று சொன்னாராம். அப்போது ரஜினி கே.பாலச்சந்தர் இயக்கத்தில்
தில்லு முல்லு
படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி என்னை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் – இயக்குனர் சுசீந்திரன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.