சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படங்களின் இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
ரசிகர்களால் வம்பில் மாட்டிய அஜித்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..!
இந்தப்படத்தில் ஜுனியர் நடிகைகளுடன் ஜோடி சேர ரஜினி தயக்கம் காட்டுகிறாராம். அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் நெல்சன். ரஜினி ஐஸ்வர்யா ராயுக்கு பச்சை கொடி காட்டினாலும், அவரை கமிட் செய்தால் பட்ஜெட் எகிறும் என்று சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டுகிறாதாம்.
அவரை விட பல மடங்கு குறைந்த பட்ஜெட்டில் கோலிவுட்டிலே நிறைய நடிகைகள் இருப்பதால் அவர்களில் யாரையாவது செலக்ட் செய்யலாம் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளதாம். ஆனாலும் ரஜினி ஜுனியர் நடிகைகளுடன் ஜோடி சேருவதில் தொடர்ச்சியாக தயக்கம் காட்டி வருகிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சீக்கிரமே ஒரு நல்ல முடிவா அறிவிங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தல, தளபதி ரசிகர்களையே வியக்க வைத்த எதற்கும் துணிந்தவன்!