பீஜிங்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த சூழ்நிலையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த விவகாரத்தில் சீனா, ரஷியாவிற்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.