மாஸ்கோ:”ரஷ்யா போன்ற நாடுகளை இரும்புத் திரைக்குள் பூட்டி வைக்க யாராலும் முடியாது,” என, அந்நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடை விதிக்கப்படும் என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து டிமித்ரி பெஸ்கோ கூறியதாவது:பொருளாதார தடைகளால் ரஷ்யா போன்ற நாட்டை இரும்புத் திரை போட்டு பூட்டி வைக்க யாராலும் முடியாது. சில நாடுகளுடன் எங்களுக்கு ஏற்கனவே பிரச்னைகள் இருந்துள்ளன. அதற்காக ரஷ்யா போன்ற நாட்டை பொருளாதார தடைகளால் தனிமைப்படுத்தி விட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யா, ஒன்றுபட்ட சோவியத் குடியரசாக இருந்தபோது, அதை இரும்புத் திரை நாடு என, மேற்கத்திய நாடுகள் அழைத்தன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் காரணமாக, உலகின் மற்ற பகுதிகளில் இருந்து ரஷ்யா துண்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement