ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE இன் கூற்றுப்படி, “இந்த மென்பொருள் உக்ரைனில் பல கணினிகளைத் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது,” என அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மெட்டா நிர்வாகி செய்த காரியம் – உடனடியாக வேலையை விட்டு தூக்கிய மார்க்!
பேஸ்புக் பாதுகாப்பு அம்சம்
இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் போது, பயனர்களின் பாதுகாப்பை கண்காணிக்க, Meta Platform Inc.க்கு சொந்தமான Facebook, ஒரு சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது உக்ரைனில் நடந்து வரும் மோதலைக் கண்காணிக்கும். மேலும், பயனர்கள் தங்கள் சுயவிவரப் படத்தை லாக் செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தகவலை பேஸ்புக் அலுவலர்கள் தங்கள்
ட்விட்டர்
பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
படிக்க:
ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா… Ukraine-இன் நிலை என்ன?
பேஸ்புக்கின் பாதுகாப்புக் கொள்கையின் தலைவரான Nathaniel Gletcher ட்விட்டரில், உக்ரைனில் உள்ள பயனர்கள் தங்கள் சுயவிவரப் புகைப்படங்களை ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து பகிர்வதைத் தடுக்கலாம். மேலும், பயனர்களின் நட்பு வரிசையில் இல்லாதவர்கள், டைம்லைனை பார்வையிடுவதையும், புதிய பதிவுகள் பெறுவதையும் பயனர்கள் தடுக்க புதிய அம்சம் வழிவகை செய்யும்.
ட்விட்டரின் புதிய அறிவிப்பு
மறுபுறம் உக்ரைனில் உள்ள Twitter பயனர்கள் தங்கள் கணக்குகளை ஹேக்கர்கள் இடமிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்றும் ட்விட்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்குகளை செயலிழக்கச் செய்யுமாறும், அவர்களின் ட்விட்டரை தனிப்பட்டதாக வைத்திருக்குமாறும் ட்விட்டர் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் ஆங்கிலம், ரஷ்ய மற்றும் உக்ரைன் ஆகிய மொழிகளில் ட்வீட் செய்து தகவல் வெளியிட்டுள்ளது.
படிக்க:
சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?
ட்விட்டர் பயனர்கள் தங்கள் கணக்குகளை எவ்வாறு செயலிழக்க செய்யலாம் என்பது குறித்த தகவலையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் போர் தொடங்கியவுடன், சமூக ஊடக பயனர்கள் டிக்டோக், ஸ்னாப்சாட், ட்விட்டர் போன்ற தளங்களில் போருக்கு எதிரான கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – ‘Truth Social’ ஆப் மூலம் Twitter பேஸ்புக்குக்கு செக் வைத்த டிரம்ப்!
ஷாட் வீடியோ பயன்பாடான TikTok இல், “ரஷ்யா” என்ற ஹேஷ்டேக் 37.2 பில்லியன் பார்வைகளையும், “உக்ரைன் 8.5 பில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த தளத்தை ரஷ்யா அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.