உக்ரைன் மீது ரஷ்ய படைகள் அறிவிப்பின்றி போர் தொடுத்தது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாக ரஷ்யாவின் போர் டாங்குகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. வான்வழி, கடல் வழி, தரை வழியாக உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஒருபுறம் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீது சைபர் தாக்குதல்களையும் ரஷ்யா தொடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், உக்ரேனுக்கு ஆதரவாக உலக நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர் குழு ஒன்று கைகோர்த்துள்ளது. இந்த குழு
ரஷ்யா மீது சைபர் தாக்குதல்
நடத்த திட்டமிட்டுள்ளது. தங்களின் சைபர் போர் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என இக்குழு வெளியிட்ட அறிக்கையின் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளது.
ரஷ்யா மீது Cyber Attack
ரஷ்யா, உக்ரைன் மீது எந்த அறிவிப்பும் இன்றி போர் தொடுத்து அப்பாவி மக்களை கொல்கிறது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று சமூக நலன் சார்ந்து செயல்படும் ஹேக்கர் அமைப்பு அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்: மக்கள் பாதுகாப்புக்காக பேஸ்புக், ட்விட்டர் எடுத்த முடிவு!
முதற்கட்டமாக ரஷ்ய அரசாங்கத்தின் இணையதளங்கள், the Kremlin, the Duma மற்றும் பாதுகாப்பு அமைச்சத்தின் இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு இரையாக்கப்பட்டுள்ளன. இதனை ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச தொலைக்காட்சி நெட்வொர்க், RT உறுதிபடுத்தியுள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையதளங்களில் சில வேகம் குறைந்தன என்றும், மற்றவை செயல்படவில்லை என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர வேண்டாம் என்றால், ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யார் இந்த ஹேக்கர்கள்
சமூக நலன்களை சார்ந்து செயல்படும் இந்த ஹேக்கர் அமைப்பில், உலகளவில் உள்ள பிரபல ஹேக்கர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள்
hacktivists
என்று குறிப்பிடப்படுகின்றனர். 2003 ஆம் ஆண்டு உதயமான இந்த குழு, டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா… Ukraine-இன் நிலை என்ன?
இதுபோன்ற தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. இந்த குழு முன்பு அமெரிக்கா, இஸ்ரேல், உகாண்டா, துருக்கி மற்றும் பிற நாடுகளின் அரசு நிறுவனங்களை தாக்கியுள்ளது. இது பேபால், Mastercard, Visa, சோனி உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களையும் குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடத்தி உள்ளது.
இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த குழு இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இவர்களை நெருங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அடையாளங்களை வெளிப்படுத்தாமல் செய்ய வேண்டிய வேலைகளை, சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
ஏன் இந்த முடிவு
உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருளை ரஷ்யா நேற்று நிறுவியது. இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE வெளியிட்ட தகவல்களின் படி, “இந்த மென்பொருள் உக்ரைனில் பல கணினிகளைத் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது,” என அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இது மிகவும் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்று நினைத்த இந்த ஹேக்கர் குழு, ரஷ்யா கணினிகள் மீது சைபர் தாக்குதலைத் தொடங்கி உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தலில், 130க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More:
சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?வெறுப்பேத்தும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து தப்ப வேண்டுமா… உங்களுக்காக உதவும் செயலிகள்!2022 இல் ஆண்ட்ராய்டு போனுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?