உக்ரைனுக்கு எதிராக முழு மூச்சில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ரஷ்யா, எப்போது தான் இந்த தாக்குதலை நிறுத்தும் என்கிற அச்சம் நிலவி வருகின்றது.
இதற்கிடையில் உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால், நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லஃவ்ரோவ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ராணுவம் வடகிழக்கு மற்றும் கிழக்கில் இருந்து கிவியை நோக்கி வந்து கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம், எங்கும் புகை மண்டலம் என பதற்றமான நிலையே இருந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் உயிருக்கு பயந்து மக்கள் மெட்ரோ பாலங்களுக்கு அடியிலும், கிடைத்த இடங்களில் பதுங்கி வருவதையும், தங்கள் வேதனையை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து வருவதையும் காண முடிகின்றது.
200 பில்லியன் டாலரை அசால்ட்டாக தூக்கிய முதலீட்டாளர்கள்.. சிக்கியது யார்..!
உக்ரேனியர்களை பாதிக்கலாம்
இது குறித்து உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அளிக்கும் தகவல்கள், உக்ரைன் அரசு அளித்து வரும் தகவல்கள் என பலவற்றின் மூலம், உக்ரைனின் மோசமான நிலையினை அறிய முடிகின்றது. இப்படி உக்ரைனில் நிலவி வரும் அசாதாரணமான நிலைக்கு மத்தியில், அத்தியாவசிய கமாடிட்டிகளில் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த போரினால் உக்ரேனியர்களின் பொருளாதாரம், அவர்களின் வாழ்வாதாரமும் மிக மோசமாக பாதிப்பு ஏற்படலாம். அவற்றில் முக்கிய அம்சங்களை பார்க்க இருக்கிறோம்.
எரிபொருட்கள்
பல ஐரோப்பிய நாடுகளும் எரிபொருளுக்காக ரஷ்யாவினையே நம்பியுள்ளன. குறிப்பாக கேஸ். முக்கியமாக குழாய்கள் வழியாக செல்லும் கேஸ்-னினை நம்பியுள்ளனர். ஆனால் இந்த நெருக்கடியான நிலையில் அதில் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே, நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும், இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை ஜெர்மனி ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஸ்
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ரஷ்யா எரிவாயு சப்ளையை முழுமையாக நிறுத்தாவிட்டாலும், நிச்சயம் தாக்கம் இருக்கலாம். இது சந்தையில் நிச்சயம் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தும். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக இருப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், தற்போது ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தால் இன்னும் தாக்கம் இருக்கலாம். ஏற்கனவே விலை பெரியளவில் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்துறையும் மோசமாக பாதிக்கப்படும்.
அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கலாம்
பலவற்றிற்கும் அடிப்படையாக கேஸ் இருக்கும் நிலையில், இது பொருளாதாரத்திலும் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக உணவு பொட்கள் விலைவாசியும் சர்வதேச அளவில் அதிகரிக்கும். குறிப்பாக கோதுமை ஏற்றுமதி, சூரியகாந்தி எண்ணெய் விலை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கலாம்.
அறுவடை பாதிக்கலாம்
இந்த போரினால் உக்ரைனின் அறுவடை பாதிக்கப்படலாம். ஏற்றுமதி பாதிக்கப்படலாம். சில நாடுகள் ரஷ்யா மற்றும் உக்ரைன் இறக்குமதியினை மட்டுமே நம்பியுள்ளன. ஆக இறக்குமதியாளார்கள் மேற்கொண்டு பிரச்சனையை சந்திக்க நேரிடும். உதாரணத்திற்கு துருக்கியும், எகிப்தும் கோதுமை இறக்குமதிக்கு இவ்விரு நாடுகளையே 70% நம்பியுள்ளன.
மக்காச் சோளம் இறக்குமதி
அதேபோல சீனாவுக்கு மக்காச் சோளத்தினை வழங்குவதில் உக்ரைன் தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோல உரங்கள் உற்பத்தியில் தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்கள் சப்ளையில் ரஷ்யா தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில் ரஷ்ய கோதுமையை இறக்குமதி செய்ய போவதாக சீனா கூறியுள்ளது.
போக்குவரத்து
ஏற்கனவே கொரோனாவினால் சர்வதேச அளவில் போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த பதற்றமான நிலை மேற்கொண்டு பாதிப்பினை ஏற்படுத்தலாம். இந்த பதற்றத்தின் மத்தியில் கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்துகள் இன்னும் பாதிக்கலாம். கடந்த 2011 முதல் சீனாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வழக்கமான, சரக்கு ரயில் போக்குவரத்து இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது உக்ரைனில் இருந்து ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையால், இன்னும் நிலைமை மோசமடையலாம் எனும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் அதிகரிக்கும்
மேலும் உக்ரைனின் துறைமுகங்களும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மேற்கொண்டு ஏற்றுமதி இறக்குமதியில் பாதிப்பு ஏற்படலாம். இதன் காரணமாக போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கும். சப்ளையும் பாதிக்கப்படலாம். அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரிக்கலாம்.
உலோகங்கள்
நிக்கல், காப்பர் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் உற்பத்தியில் ரஷ்யாவும் உக்ரைனும் முன்னணியில் உள்ளன. இது தவிர நியான், பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் போன்ற அத்தியாவசிய மூலப்பொருட்களின் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆக ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளால் , இந்த மெட்டல்களின் விலை இன்னும் அதிகரிக்கலாம்.
மைக்ரோசிப்கள்
கடந்த ஆண்டிலேயே மைக்ரோசிப்கள் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனை நடப்பு ஆண்டில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நடப்பு ஆண்டில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் பதற்றத்தினால், இது இன்னும் நீட்டிக்கலாம் என்ற அச்சமே இருந்து வருகின்றது.
உலக நாடுகளையே பாதிக்கும்
ரஷ்யா மீதான பொருளாதார தடை மூலமாக மைக்ரோசிப் வணிகம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்கா மிரட்டி வருகின்றது. எனினும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மைக்ரோசிப் உற்பத்திக்கு மிக முக்கிய மூலதனங்களாக இருக்கும் நியான், பல்லேடியம், மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவற்றை அதிகம் ஏற்றுமதி செய்வதும் ரஷ்யா உக்ரைன் தான். ஆக மொத்தத்தில் ரஷ்யா மீதான தடை, உலக நாடுகளை பாதிக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
சர்வதேச பிரச்சனையாக மாறும்.
சிப்பில் பயன்படுத்தப்படும் நியான் 90% ரஷ்யாவில் இருந்தே கிடைக்கிறது. இதே 60% ஒடெசாவில் உள்ள ஒரு நிறுவனத்தால் சுத்திகரிக்கப்படுகின்றது. தற்போதைக்கு கார் உற்பத்தியாளர்கள், சிப் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும், இன்னும் 2 – 3 வாரங்கள் இப்பிரச்சனை இருந்தால் இது சர்வதேச அளவிலான பிரச்சனையாக மாறும். மொத்தத்தில் ரஷ்யாவினை பகைத்துக் கொள்வதும் உலக நாடுகளுக்கு பிரச்சனை தான். ஆக இதற்கு ஒரே முடிவு ரஷ்ய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறுவது தான். அதற்கு சுமூக பேச்சு வார்த்தை ஒன்றே கைகொடுக்கும். இது தான் மக்களையும், பொருளாதாரத்தினையும் காப்பாற்ற உதவும்.
Sanctions on Russia are a problem for the world, Putin launches planned attack
Sanctions on Russia are a problem for the world, Putin launches planned attack/ரஷ்யா மீதான தடைகள் உலக நாடுகளுக்கு தான் பிரச்சனை.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய புடின்!