ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ள நிலையில், 2-வது நாளாக தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தைவான்,ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை, ராஜாங்க ரீதியான பயணத் தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளன.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம் அதிக வருமானத்தை பெற்று வரும் ரஷ்யாவிடம் 643 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி கையிருப்பில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது எழுந்துள்ள சர்வதேச அழுத்தத்தால் ரஷ்யாவின் பொருளாதரம் வரும் காலங்களில் நொறுங்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்