வலிமை படம் பைரசி தளத்தில் லீக்
'வலிமை' படத்தின் பைரசி பிரிண்ட் முழு படமுமும் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'வலிமை' இன்று காலை திரையரங்குகளில் வெளியானது . ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் வெளியாகிய சில மணி நேரத்தில் இப்படத்தின் பைரஸி பிரிண்ட் முழு படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. சில இணையதள பக்கங்களிலும் , டெலிகிராம் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார் . இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர் .