பெங்களூரு-சொந்த பைக்குகளை வாடகைக்கு விடக் கூடாது என, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பெங்களூரில் பலரும் சொந்த பைக்குகளை விதிமுறைக்கு புறம்பாக, வாடகை டாக்சிகளாக செயலிகளில் பதிவு செய்து ஓட்டுகின்றனர். இப்படி, சொந்த வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதால், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டித்து வருகின்றனர்.சாலை பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:முறைகேடாக செயலிகள் வாயிலாக சொந்த பைக்குகளை டாக்சிகளாக பயன்படுத்தி, பயணியரை ஏற்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு சக்கர வாகனம் மட்டுமின்றி, கார் போன்ற வாகனங்களும் வெள்ளை நம்பர் பிளேட் கொண்டவைகளை, வாடகை பயணத்துக்கு பயன்படுத்த கூடாது.சில நாட்களுக்கு முன் 500 பைக்குகள் முறைகேடாக வாடகை பயணத்துக்கு பயன்படுத்தப்பட்டது தெரிய வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Advertisement