உக்ரைன் மீது ரஷியா இன்று 2-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக துணை மந்திரி ஹன்னா மால்யார் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
உக்ரைன் பதற்றம்- டெல்லியில் ரஷிய தூதரகம் முற்றுகை