மத்திய பிரதேச மாநிலம் உமாரியாவில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
பதார்ச்சத் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயதே ஆன சிறுவன், அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். கிணற்றில் 40 அடியில் சிக்கியுள்ள சிறுவனுக்கு ஆழ்துளைக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மாவட்ட அதிகாரிகள் உள்பட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். சிறுவனை அடைய அந்த கிணற்றுக்கு அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.