ரஷ்யா உக்ரைன் மத்தியிலான போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து முதலீட்டு சந்தைகள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. பங்குச்சந்தையை தாண்டி கிரிப்டோ முதலீட்டு சந்தையும் அதிகப்படியான சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு கிரிப்டோ சந்தையில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு தொகை வெளியேறியுள்ளது இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை பதிவு செய்துள்ளது.
ரஷ்யா மீது இத்தனை தடைகளா.. புதின் நிலைமை இனி திண்டாட்டம் தானா..!!
ரஷ்ய – உக்ரைன் போர்
ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு பங்குச்சந்தைக்கு இணையாக கிரிப்டோ சந்தையும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டது. பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் இரட்டை இலக்கு அளவில் சரிவை பதிவு செய்து உள்ளது.
அதிகப்படியான சரிவு
உக்ரைன் மீதான போர் அறிவிப்புக்கு பின்பு எதிரியம், கார்டானோ, அவலான்சி, போல்காடாட் ஆகியவை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. ஆனால் மீம்காயின்களான டோஜ்காயின் மற்றும் ஷிபா இனு மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
பிட்காயின், டெதர் மட்டுமே குறைவான சரிவை பதிவு செய்துள்ளது.
டிஜிட்டல் கோல்டு
2022ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து சரிந்து வரும் கிரிப்டோகரன்சி சந்தை, இந்த உக்ரைன் – ரஷ்யா போர் மூலம் கடுமையான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதனால் டிஜிட்டல் கோல்டு என்னும் பெயரை கிரிப்டோ சந்தை இழந்துள்ளது.
கிரிப்டோகரன்சி விலை
இன்று மாலை வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி விலை நிலவரம்
பிட்காயின் – $38,864.03 டாலர்
எதிரியம் – $2,672.21 டாலர்
டெதர் – $1.00 டாலர்
பினான்ஸ் – $363.92 டாலர்
USD காயின் – $1.00 டாலர்
ரிப்பிள் – $0.71 டாலர்
கார்டானோ – $0.86 டாலர்
சோலானோ – $89.85 டாலர்
டெரா – $66.63 டாலர்
அவலான்சி – $75.77 டாலர்
பினான்ஸ் USD – $1.00 டாலர்
டோஜ்காயின் – $0.12 டாலர்
போல்காடாட் – $16.21 டாலர்
ஷிபா இனு – $0.0000241 டாலர்
டெரா USD – $1.00 டாலர்
7 நாள் சரிவு
கடந்த 7 நாட்களில் பிட்காயின் – 3.90% சரிவு, எதிரியம் – 7.88% சரிவு, டெதர் – 0.02% சரிவு, பினான்ஸ் – 10.35% சரிவு, USD காயின் – 0.02% சரிவு, ரிப்பிள் – 9.57% சரிவு, கார்டானோ – 15.87% சரிவு, சோலானோ – 4.91% சரிவு, டெரா – 30.09% சரிவு, அவலான்சி – 13.38% சரிவு, பினான்ஸ் USD – 0.11% சரிவு, டோஜ்காயின் – 12.07% சரிவு, போல்காடாட் – 11.38% சரிவு, ஷிபா இனு – 17.28% சரிவு, டெரா USD – 0.28% சரிவு.
Russia-Ukraine Crisis: $200 billion wiped from crypto market; Cardano, Avalanche, Polkadot falls
Russia-Ukraine Crisis: $200 billion wiped from crypto market; Cardano, Avalanche, Polkadot falls 200 பில்லியன் டாலரை அசால்ட்டாக தூக்கிய முதலீட்டாளர்கள்.. சிக்கியது யார்..!