Malaysia Earthquake updates: மலேசியாவின் சுனாமி எச்சரிக்கை இல்லை

Earthquake: இன்று காலை, மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் இன்று காலை ஏற்பட்ட வலுவான மற்றும் ஆழமற்ற நிலநடுக்கம் மக்களை பீதிக்குள்ளாக்கியது, காயங்கள் அல்லது கடுமையான சேதம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான புக்கிட்டிங்கிக்கு வடமேற்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  
இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் அடியில் ஏற்பட்டது.

மலேசியாவின் கோலாலம்பூர் அருகே இன்று (2022 பிப்ரவரி 25,வெள்ளிக்கிழமை) காலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 07:09 மணியளவில் இந்தோனேசியாவின் புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கே 66 கிமீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்ட்டது.

மேலும் படிக்க | மலேசியாவில் நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

ஆனால், சுனாமி ஆபத்து (Tsunami Alert) இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் ஏஜென்சியின் தலைவர் ட்விகோரிடா கர்னாவதி தெரிவித்தார். ஆனால் இந்த நிலநடுக்கத்திற்கான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

earthquake

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கில் மக்கள் தெருக்களில் வந்து குவிந்தனர். மேற்கு பசாமான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  

கடந்த ஆண்டு ஜனவரியில், மேற்கு சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது. அந்த பூகம்பத்தில்  குறைந்தது 105 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 6,500 பேர் காயமடைந்தனர் என்பதால், நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து மக்கள் அச்சப்படுகின்றனர்.

 மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேலும் படிக்க | அட்லாண்டிக் பெருங்கடலின் கீழ் அரிய பூமராங் பூகம்பம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.