ரஷிய ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை நூறுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷிய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது. அதேநேரம், உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன.
ரஷியா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் போரை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.
ராணுவச் சட்டம் அமல்: உக்ரைன் அதிபர்
நாட்டில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியுள்ளார்.
ரஷிய படைகளுடன் உக்ரைன் ராணுவம் சண்டை போட்டு வரும் நிலையில் அதிபர் விளாடிமிர் நாட்டு மக்களிடம் காணொளியில் உரையாடினார்.
அப்போது அவர் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் நமக்கு ஆதரவாக இருப்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். நாட்டு மக்களுக்காக ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர் என்றார்.
அதேநேரம் போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைனில் தமிழக மாணவர்கள்
ரஷியாவின் போரால் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் தங்களை நாட்டுக்கு அழைத்து செல்ல விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் கடிதம்
முன்னதாக, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5,000 தமிழ் மாணவர்களை பத்திரமாக நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்பு நடவடிக்கையை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மீட்பு நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு!
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை குழுக்களை அனுப்பி வருவதாக வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு மீட்புப் பணிக்காக இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் அனுப்பப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
உக்ரைனை ரஷியா கிழக்கு பக்கத்திலிருந்து தாக்கி வருகிறது. இதையடுத்து, உக்ரைன் வான்வழியை மூடிவிட்டது.
அத்துமீறி வரும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்பதால் உக்ரைன் எல்லையையொட்டி உள்ள பிற நாடுகளின் எல்லைகளுக்கு இந்தியா விமானங்களை அனுப்பி வருகிறது.
உக்ரைன் தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சருடன் பேசியதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
Just spoke to Foreign Minister Sergey Lavrov of Russia on the Ukraine developments.
Underlined that dialogue and diplomacy are the best way forward.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 24, 2022
ரஷ்யா உக்ரைன் போர் 2-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள வின்னிட்சியா மருத்துவக் கல்லூரியில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர் சதாப் ஜர்ரின், இந்திய மாணவர்கள் இன்று வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் எந்த திட்டமும் பலனளிக்கவில்லை என்று indianexpress.com இடம் கூறினார். இதனால் மனம் உடைந்து எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நாங்கள் சோர்வடைந்திருக்கிறோம். எங்களின் ஒரே நம்பிக்கை இந்திய அரசுதான். எங்களை மீட்குமாறு அரசாங்கத்திடம் முறையிடுகிறோம்,” என்று அவர் தொலைபேசியில் தெரிவித்தார்.
*நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ள ரஷ்யா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடனை கடுமையாக எச்சரித்துள்ளது.
அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள வருமாறு உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய புதின் உக்ரைனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், மழலையர் பள்ளி மற்றும் அனாதை இல்லம் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார், தி நியூயார்க் டைம்ஸ். உக்ரேனிய அதிகாரிகள் தாக்குதல்களின் ஆதாரங்களை ஹேக்கிற்கு அனுப்புவார்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Today’s Russian attacks on a kindergarten and an orphanage are war crimes and violations of the Rome Statute. Together with the General Prosecutor’s Office we are collecting this and other facts, which we will immediately send to the Hague. Responsibility is inevitable.
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 25, 2022
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படை நடத்திய தாக்குதலின் ஒரு காட்சி
#russiaukrainecrisis | Indian students stranded in Ukraine take refuge in bunkers in Kharkivhttps://t.co/RWNfzeARxG pic.twitter.com/S24laVkl4S
— The Indian Express (@IndianExpress) February 25, 2022
உக்ரைன் மோதலில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ்-வில் இருந்து வடமேற்கே 7 கிமீ (4 மைல்) தொலைவில் உள்ள ஹோஸ்டோமல் விமான தளத்தை அதன் படைகள் கைப்பற்றி, அப்பகுதியில் விமானப்படை துருப்புகளைத் தரையிறக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது. இந்த நடவடிக்கையில் உக்ரைன் சிறப்புப் பிரிவுகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். ரஷ்ய இராணுவம் மேற்கில் இருந்து கிவ் நகருக்குள் நுழைவதைத் தடுத்ததாகவும், கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதப் படைகள் ரஷ்ய ராணுவ ஆதரவுடன் உக்ரைன் ராணுவ நிலைகளைத் தாக்கியதாகவும் அமைச்சகம் கூறியது. கிவ்-வின் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கப் போவதில்லை என்று ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய மறுநாளே, வழக்கம்போல் அந்த இடத்தில் பணியாளர்கள் பணிபுரிவதாக ரஷ்யா கூறியுள்ளது
உக்ரைன் வீரர்களுடன் கடுமையான சண்டைக்குப் பிறகு ரஷ்யப் படைகள் செயலிழந்த வசதியைக் கைப்பற்றிய ஒரு நாள் கழித்து, செர்னோபில் அணுமின் நிலையத்தின் பணியாளர்கள் வழக்கம் போல் நிலையங்களில் சேவை மற்றும் கதிர்வீச்சு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று ரஷ்ய உயர் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை உக்ரைன் மீது பலமுனை தாக்குதலைத் தொடங்கினார். சர்வதேச கண்டனம் மற்றும் பொருளாதாரத் தடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தலையிடும் எந்த முயற்சியும் அவர்கள் பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்தும் என்று மற்ற நாடுகளை எச்சரித்தார்.
ருமேனியா, ஹங்கேரியில் இருந்து வெளியேற்றும் வழிகளை அமைக்க இந்தியா வேலை செய்கிறது உக்ரைனில் உள்ள தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு தெரிவித்துள்ள புதிய ஆலோசனையில், இந்திய தூதரகம், இந்திய தூதரகத்துடன் இணைந்து, ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து வெளியேற்றும் பாதைகளை நிறுவுவதற்கு பணிபுரிந்து வருவதாகவும், எல்லை சோதனைச் சாவடிகளில் குழுக்கள் வைக்கப்படுவதாகவும் கூறியது. மேற்கூறிய சோதனைச் சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், வெளியுறவு அமைச்சகத்தின் குழுக்களுடன் ஒருங்கிணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முதலில் புறப்படும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
வார்சாவில் உள்ள இந்திய தூதரகம், போலந்து-உக்ரைன் எல்லைக்கு பொது போக்குவரத்து மூலம் வரும் இந்தியர்கள் ஷெஹினி-மெடிகா எல்லையை கடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது.
Indian nationals arriving at the Poland-Ukraine border by public conveyance are advised to make for the Shehyni-Medyka border crossing: Embassy of India, Warsaw pic.twitter.com/l8RZt2xFl4
— ANI (@ANI) February 25, 2022
ரஷ்ய இராணுவத் தாக்குதலால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டுக்கு வெள்ளிக்கிழமை 2 விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை வழியாக உக்ரைன்-ருமேனியா எல்லையை அடைந்த இந்தியர்கள் இந்திய அரசின் அதிகாரிகளால் புக்கரெஸ்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதனால், அவர்கள் 2 ஏர் இந்தியா விமானங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2 ஏர் இந்தியா விமானங்களும் சனிக்கிழமை புக்கரெஸ்டில் இருந்து புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 20,000 இந்தியர்கள் — முக்கியமாக மாணவர்கள் — தற்போது உக்ரைனில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவப் படையெடுப்பை அறிவித்த பிறகு, உக்ரைனுக்குள் (மாலை 4 மணி வரை, செப்டம்பர் 24 வரை) ரஷ்ய இராணுவத் தாக்குதல்களின் இருப்பிடங்களை இந்த வரைபடம் காட்டுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகளில் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உக்ரேனிய ராணுவ சீருடை அணிந்த ரஷ்ய வீரர்கள் கீவ் பகுதியில் நுழைந்த நிலையில், நாசகாரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து’ டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நாளை நண்பகல் 12 மணியளவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டெடுக்க இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசின் உத்தரவின்பேரில் விரைவில் மீட்பு பணி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் அருகே அத்தியாநல்லூரில்’ பள்ளியில் வழங்கப்பட்ட அழுகிய முட்டையை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு’ 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் – ரஷ்ய போர் எதிரொலியால்’ நடப்பு ஆண்டிற்கான கால்பந்து சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து பாரிஸுக்கு மாற்றம் செய்து யூ.இ.எஃப்.ஏ அறிவித்திருக்கிறது.
கிழக்கு மற்றும் வடகிழக்கில் இருந்து ரஷ்யப் படைகள் தலைநகர் கிவ்-வை நெருங்கி வருகின்றன. கிவ்-வில் இருந்து 3 மைல் தொலைவில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக உக்ரைன் ராணுவம் தகவல்
ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு’ உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனில் அதிக மக்கள் வசிக்கு கார்கிவ் நகரத்தில்’ பீரங்கிகள் மூலம் ரஷ்ய ராணுவப்படை தாக்குதல்!
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அரசு செலவில் விமானங்கள் மூலம் மீட்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தகவல்
ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகருக்குள் முன்னேறி வரும் நிலையில் தலைநகர் கிவ்-ல் மீண்டும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. அங்குள்ள அரசு அலுவலகங்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தண்டையார்பேட்டை போலீசார் மனு அளித்திருந்த நிலையில், “காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை இல்லை” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதித்த நிலையில் ரூ.500 ஆக குறைப்பட்டுள்ளது என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் ஒடிசா மாணவர்கள், ஊழியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷ்யா தடை விதித்துள்ளது. மேலும், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கான வான்வெளியை ரஷ்யா அரசு மூடியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைதான ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ரானுவம் போர் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுக்கப்பு உறுதி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன, ரஷ்யா இடையிலான முரண்பாட்டை அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வன்முறையை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை இருதரப்பும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் எல்லை அருகே இருக்கும் மாணவர்கள் வெளியுறவு குழுவுடன் ஒருங்கிணைந்து புறப்பட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், செலவு கணக்கைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று பேசிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, “எங்களது நாட்டிற்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு மேலும் தொடர்ந்து வருகிறது. இது மாஸ்கோ மீது மேற்கு நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் போதாது என்பதைக் காட்டுகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு என்ன நடக்கிறது என்பதை உலகம் தொடர்ந்து உற்று நோக்கி வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய ராணுவம், கைப்பற்றப்பட்ட உக்ரைன் ராணுவ வாகனங்களில் அதிவேகமாக தலைநகர் கிவ்வுக்குள் நுழையும் என உக்ரைன் பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கேர்ஸனை கைப்பற்றிய ரஷ்யா அங்குள்ள அரசு கட்டிடத்தில் உக்ரைன் கொடியை இறக்கி, ரஷ்ய தேசிய கொடியை ராணுவத்தினர் ஏற்றி வைத்தனர்.
உக்ரைனில் போர் சூழல் மோசம் அடைந்து வருகின்ற நிலையில் தமிழகத்தில் இருந்து படிக்கச் சென்ற மாணவர்கள் அங்குள்ள பாதாள அறைகளில் தங்கியுள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தாயகம் திரும்ப ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் மாட்டிக் கொண்ட தமிழர்கள் தாயகம் திரும்ப உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மாவட்ட, மாநில அளவிலும், டெல்லியிலும் தொடர்பு அலுவலர்களை தமிழக அரசு நியமித்துள்ள நிலையில் உக்ரைனில் இருந்து இன்று காலை 10 மணி வரை 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டனர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்ய விமானத்தை தாக்கி அழித்தது உக்ரைன் படை. ஆனால் தாக்குதலுக்கு ஆளான போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் உள்த்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டோன் ஹெராஷ்சென்கோ கூறியுள்ளார்.
source : Reuters
ரஷியாவுடனான ராஜீய ரீதியிலான உறவுகளை முறித்து கொள்கிறோம் என்று உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, ரஷ்யாவின் முதல் இலக்காக தான் இருப்பதாகவும், அவரது குடும்பம் இரண்டாவது இலக்காக இருப்பதாகவும் கூறினார்.
“உக்ரைனை அரசியல் ரீதியாக அழிக்க நினைக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
VIDEO: Russian ‘sabotage groups’ in Kyiv, says Ukraine’s President Volodymyr Zelensky.
“The enemy’s sabotage groups have entered Kyiv,” says Zelensky, urging residents to be vigilant and observe curfew rules pic.twitter.com/Oi3PD7fjpm
— AFP News Agency (@AFP) February 25, 2022
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக 20 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக ஜார்ஜியா மற்றும் லிதுவேனியாவில் ரஷிய பாஸ்போர்ட்டுகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷியாவுடனான எரிவாயு குழாய் திட்டத்தை ஜெர்மனி நிறுத்தி கொண்டது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் ஜெர்மனி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள சீனர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர சீன அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
உக்ரைன் – ரஷfயா போரால் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1076 புள்ளிகள் அதிகரித்து 55,606 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து செல்போன் விளக்குகளை ஒளிர செய்து லூதுவேனியா மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.