‘
வலிமை
‘ பட ரிலீசை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். நேற்று அதிகாலை முதலே திரையரங்குகள் திருவிழாவை போல களைகட்டி வருகின்றன. ரசிகர்களுக்கு நிகராக திரையுலக பிரபலங்களும் ‘வலிமை’ படம் குறித்தும், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தும் இணையத்தில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் அஜித், எச்.வினோத்,
போனி கபூர்
கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வலிமை’.
‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்ட அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பி இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் நீளம் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் சுத்தமாக செட் ஆகவில்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.
ரஜினியை நினைத்து கவலைப்படும் ரசிகர்கள்: சீக்கிரமே நல்ல முடிவா எடுங்க தலைவரே..!
இந்நிலையில் நாளை முதல் ‘வலிமை’ படத்தில் திடீர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொட்டர்ந்து படக்குழு 14 நிமிடங்கள் காட்சியை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. 14 நிமிடங்கள் குறைத்த புதிய வெர்ஷன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை அல்லாத தினத்தில் வெளியானாலும் ‘வலிமை’ முதல்நாள் கலெக்ஷன் மற்ற படங்களின் கலெக்ஷன் சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, வலிமை முதல் நாளில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!