போர் படையெடுப்பை விட அதிமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் வழக்கம்
Xiaomi
நிறுவனத்துக்கு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் தனது Xiaomni Note 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
அடுத்தது என்ன என்ற யோசனை எழுவதற்கு முன்னே, புதிய ஸ்மார்ட்போன்கள் அறிவிப்பை சியோமி வெளியிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடலின் ப்ரோ வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவருகிறது.
Flipkart Sale: வெறும் 1699 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி லேட்டஸ்ட் 5ஜி போன்!
முன்னதாக வெளியான ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைப்பு வசதி இல்லாமல் வந்தது. அந்த கவலையைப் போக்கும் வகையில், Xiaomi Note 11 Pro, சியோமி
ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ்
என இரு மாடல் ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைப்பு ஆதரவுடன் வெளியாக உள்ளது.
சியோமி நோட் 11 ப்ரோ எதிர்பார்ப்புகள்
இதற்கான வெளியீட்டு தேதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 9ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது. சந்தையில் 60% விழுக்காடு வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் சியோமி நிறுனத்திற்கு, இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு கூடுதல் பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Nord CE 2 5G போன் வெளியீடு – அப்டியென்ன பெருசா இந்த ஒன்பிளஸ் போன்ல இருக்கு!
வெளியான தகவல்களின் படி, இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமோலெட் திரையுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் 5ஜி சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படலாம். இந்திய சந்தையில் ரூ.23,999 முதல் இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Redmi Note 11 specs
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை, 50 மெகாபிக்சல் சாம்சங் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 33W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.
மேலும் படிக்க:
Redmi Note 11: ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50 MP கேமரா, AMOLED திரை… வரிசைகட்டும் சியோமி போன்கள்!
Redmi Note 11s specs
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனானது 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை, 108 மெகாபிக்சல் சாம்சங் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 33W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் கொண்டு இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!