இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க! உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்குனு அர்த்தமாம்



  பொதுவாக ஒருவரது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அதோடு ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிக்காட்டும்.

அந்த அறிகுறிகளை கூர்மையாக கவனித்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை சரியான நேரத்தில் செய்வதன் மூலம், உயிருக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கலாம்.

தற்போது கொலஸ்ட்ரால் அதிகம் என்பதை வெளிகாட்டு அறிகுறிகள் என்ன? இதனை எப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம்.             

எச்சரிக்கை அறிகுறிகள்

  •    கொலஸ்ட்ராலால் உருவாக்கப்படும்,கட்டிகள் இரத்த ஓட்டத்தில் தடை மற்றும் இடையூறை ஏற்படுத்துகிறது. இது தான் பெருந்தமனி தடிப்பு அழற்சி என்னும் நிலையை உண்டாக்குகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் கைகளில் வலியை உணரக்கூடும். 
  •  சருமத்தில் திடீரென்று மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் வளர்ச்சியைக் கண்டால், உங்கள் சருமத்தின் கீழ் கொழுப்புக்கள் தேங்கி இருக்கலாம்.
  • ஒருசிலருக்கு கண்களின் கீழே கோடுகளைக் காணலாம். இந்த வலியற்ற தேக்கங்கள் உங்கள் உள்ளங்கைகளிலோ அல்லது உங்கள் கால்களின் பின்புறத்திலோ தென்படலாம்.  
  •   சிலருக்கு, கார்னியாவின் வெளிப்பகுதிக்கு மேலேயும், கீழேயும் நீல நிற அல்லது சாம்பல் நிற அல்லது வெள்ளை நிற வளையம் நன்கு தெளிவாக காணப்படும். இந்நிலை “ஆர்கஸ் செனிலிஸ்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது வயதானதற்கான ஒரு சாதாரண அடையாளமாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்நிலை 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் போது, இதற்கு ஹைப்பர்லிபிடெமியா காரணமாகும் மற்றும் இது பெரும்பாலும் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது.

எப்படி சரி செய்யலாம்?

  •  காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லை காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன்பும் தவறாமல் மென்று சாப்பிடுங்கள். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட சமைக்காமல் சாப்பிடுவதே சிறந்தது.
  •  தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடலாம் அல்லது ஒரு டீபூன் நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
  •   மல்லி விதையை ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.  
  •  ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க சிறந்த பலன் கிடைக்கும்.
  •   கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் ஆளி விதை பவுடரை சேர்த்து கலந்து குடிப்பது நல்லது.
  •   அன்றாட உணவில் கானாங்கெளுத்தி, சால்மன், மத்தி போன்ற மீன்களை சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கும். நீங்கள் சைவ உணவாளராக இருந்தால், தினமும் 100 மிகி மீன் எண்ணெய் மாத்திரையை எடுக்கலாம்  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.