இலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கணினி குற்ற விசாரணை பிரிவிற்கு நாளாந்தம் 15 முதல் 20 வரையான இணைய வழி குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைப்பதாக சி பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே, இணைய வழி மோசடிகள் குறித்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், பிடியாணை உத்தரவு இன்றி கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.