ரகசிய இடத்தில் பதுங்கியுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு முக்கியமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மூன்றாவது நாளாக உக்ரைன் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் யுத்தம் நடத்திவருகின்றன.
இந்த சூழலில் ரகசிய இடத்திலிருந்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும்.
நாட்டின் பிரதமர், முக்கிய அதிகாரிகள் இங்கு தான் உள்ளனர்.
ரஷ்யப் படைகள் நகருக்குள் நுழைந்ததால், நாட்டின் தலைவர்கள் இங்கிருந்து வெளியேறிவிடவில்லை.
Deep respect to President @ZelenskyyUa and the brave people of #Ukraine
The spirit of a free and democratic #Ukraine is strong. pic.twitter.com/vOIZA3FoYE
— Charles Michel (@eucopresident) February 25, 2022
எங்கள் சுதந்திரத்தை நாங்கள் பாதுகாத்து வருகிறோம், இதை தொடர்ந்து மேற்கொள்வோம்.
உக்ரைனின் கதி என்ன என்பது இன்று முடிவாகிவிடும்.
இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உக்ரைனில் இருந்து தப்பி செல்லாமல் தனது நாட்டு மக்களுடன் இருக்கும் ஜெலன்ஸியின் தேசப்பற்று பாராட்டுதற்குரியது என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.