உக்ரைன் மீது படையெடுத்து யுத்தம் செய்து வருகிறது ரஷ்யா. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக வசித்து வந்த இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 219 இந்தியர்கள் மும்பை திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசம் எனத் தெரிவித்துள்ளார் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர்.
அனைத்து மாணவர்களும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வரை அவர்களுக்கான உணவு, உறைவிடம் மாநகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களை மும்பை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
