சென்னை: போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அப்போது, விரைவில் உங்களை மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், அவர்களை மீட்க மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும நிலையில், தமிழக அரசும், அரசு சார்பில், சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைத்து, தேவைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இநத் நிலையில், எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை இன்று காலை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,அங்கு சுமார் 1,500 பேர் உதவிக்காக பதிவு செய்துள்ளது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் உரையாடினார்.
அப்போது, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தைரியமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். விரைவில் உங்களை மீது இந்தியா அழைத்து வந்து விடுவோம், தைரியமாக இருங்கள். அதற்கான பணியில் தான் ஈடுபட்டு வருகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.