புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள்.
உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., படிப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் படிப்புக்கான செலவும் குறைவு. இதனால் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், ”இந்தியாவில் தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 10 – 12 லட்ச ரூபாய் செலவாகும். நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 50 லட்ச ரூபாய் செலவாகும். உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 4 – 5 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும். இது பஞ்சாப் தனியார் கல்லுாரிகளில் ஆகும் செலவை விட மூன்று மடங்கு குறைவு,” என்றார்.
புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள்.உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்.,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.