உக்ரைனில் ரஷியா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மக்கள் மிரண்டு உள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கியேவை ரஷியா ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கையில் எடுத்தால் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புதின் ஆகிய இருவரிடமும் உக்ரைன் நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாடு உக்ரைன் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ஏற்பாட்டில் ஈபிள் டவரில் உக்ரைன் நாட்டு தேசியக் கொடியின் வண்ணங்களை விளக்குகளால் ஒளிரவிடப்பட்டுள்ளன. இதனால் ஈபிள் டவரில் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிருகிறது.
இதையும் படியுங்கள்..
தூதரகத்துக்கு நேரில் சென்று போரை நிறுத்துமாறு போப் வேண்டுகோள்