கீவ்: உக்ரைன் பதுங்கு குழியில் தங்கியிருக்கும் பெங்கரூருவைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன்-ரஷ்யா போர் தற்போது உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை தாக்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்திருந்தார். குறிப்பிட்ட ராணுவ முகாங்களில் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும் உக்ரைன் அரசு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அவர்களை போர் ஏற்படும் சூழலில் பதுங்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள பதுங்கு குழிகளில் தங்க வலியுறுத்தியது.
இதனை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் பதுங்கு குழிகளில் சரியான உணவு, உடை மற்றும் காற்றோட்டம் இன்றி பல நாட்களாக தங்கி வருகின்றனர். இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி மேக்னா முன்னதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஷார்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவர்கள் பதுங்கு குழிகள் தங்கியுள்ளதாகவும் தங்களை பத்திரமாக தாயகம் மீட்டுவர இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக மத்திய அரசு மீட்பு விமானங்கள் மூலமாக மாணவர்களை தலைநகர் டில்லிக்கு தனது சொந்த செலவில் பத்திரமாக மீட்டு கொண்டு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement