உக்ரைன்
போர் இப்போதைக்கு முடியாது. நீண்டதொரு போராக இது மாறும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அதகளம் செய்து கொண்டிருக்கிறது. சில நகரங்களைப் பிடித்து விட்ட ரஷ்யப் படை தற்போது கீவ் நகரை வளைத்து நிற்கிறது. விரைவில் கீவ் நகரம் வீழலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு யாரும் உதவவில்லை என்று அதன் அதிபர் விலாடிமிர் ஜெலின்ஸ்கி உருக்கமாக பேசியதைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பிய நாடுகள் சில ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஷ்யாவும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் உக்ரைன் போர் இப்போதைக்கு முடியாது, நீண்ட போராக இது மாறும் வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். இதுகுறித்து மேக்ரான் கூறுகையில், உலகம் நீண்டதொரு போரைக் காண தயாராக வேண்டும். உக்ரைன் – ரஷ்யா போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பி்லலை. இது நீளும் வாய்ப்புகளே அதிகம்.
இந்தப் போர் இப்போது முடியாது. இந்த நெருக்கடி தீராது. நீண்டு கொண்டே செல்லும். இதன் பின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும். இதற்கு நாம் தயாராக வேண்டும்.
“முடியாதுங்கிற வார்த்தையே” .. புது அகராதி படைத்த புடின்!
ஐரோப்பாவுக்கு மீண்டும் போர் வந்துள்ளது. இந்தப் போரை ஒரு தலைபட்சமாக புடின் தேர்வு செய்துள்ளார். மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியை அவர் உருவாக்கியுள்ளார். உக்ரைன் மக்கள் இந்தப் போரை எதிர்த்து வருகின்றனர். உக்ரைன் மக்களுக்கு துணையாக ஐரோப்பா நிற்கும். இதை நாங்கள் உரத்துச் சொல்ல விரும்புகிறோம்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பொருளாதாரத் தடை உள்ளிட்டவை மட்டும் போதாது. இன்னும் தீவிரமான முயற்சிகள் தேவை. அதை நாங்கள் செய்வோம் என்றார் மேக்ரான்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தம் ஏற்பட தொடர்ந்து முயற்சித்து வந்தவர் மேக்ரான். இதுதொடர்பாக புடினுடன் தொடர்ந்து பேசி வந்தார். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனையும், புடினையும் சந்திக்க வைக்கவும் முயற்சித்து வந்தார். ஆனால் அது சரிவரவில்லை. இந்த நிலையில்தான் இந்தப் போர் முடியாது என்று மேக்ரான் கூறியுள்ளார்.