உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமென்றும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும், போரின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பிரதமர், மீண்டும் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வழிகளிலும் உதவும் என்றார். இதனிடையே, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியாக இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மோடியிடம் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.