ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தின் சமீபத்திய நிலை குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
- உக்ரைன் சனிக்கிழமையன்று போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக ரஷ்ய ஆலோசனைகளை நிராகரித்தது. ஆனால் இராணுவ மோதலை உக்ரைன் நீடிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டிய பின்னர் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை ஏற்க தயாராக இல்லை என்று கூறியுள்ளது.
-
ரஷ்யப் படைகள் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் பீரங்கி மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் உக்ரேனிய நகரங்களைத் தாக்கின, ஆனால் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தலைநகர் கீவ் உக்ரைனின் கைகளிலேயே இருப்பதாகக் கூறியுள்ளார்.
- தலைநகர் கீவில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை சிட்டி சென்டரின் வடமேற்கே ஒரு பகுதியில் பீரங்கி மற்றும் கிராட் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியதை அடுத்து , உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஐக்கிய நாடுகள் சபையில் “அரசியல் ஆதரவை” கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினார்.
- புடினின் இராணுவத்தை எதிர்த்து போராடிவரும் 44 வயதான உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னை பதவி நீக்கம் செய்து தலைநகர் கீவை கைப்பற்றுவதற்கான ரஷ்ய முயற்சியை முறியடித்துவிட்டதாக கூறினார். நாட்டைவிட்டு வெளியேறும் அல்லது தப்பிச்செல்லும் வாய்ப்புகளை நிராகரித்துள்ள அவர், “நான் இங்கே தான் இருக்கிறேன், நாங்கள் எந்த ஆயுதங்களையும் கீழே வைக்க மாட்டோம். நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாப்போம், ஏனென்றால் எங்கள் உண்மைத்தன்மையை எங்கள் ஆயுதம்” என்று அவர் கூறினார்.
- ரஷ்யா படையெடுப்பில், இதுவரை உக்ரைன் தரப்பிலிருந்து மூன்று குழந்தைகள் உட்பட 198 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,115 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்தார்.
- கீவ் நகர மேயர் சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை இடைவேளையின்றி ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளார்.
- உக்ரைனுக்கு அமெரிக்க பங்குகளில் இருந்து கூடுதலாக 350 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை விடுவிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
- உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பைக் கண்டிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஐ.நா சபையின் 15 உறுப்பினர்களில் 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வாக்களிக்கவில்லை. ரஷ்யா நிரந்தர உறுப்பினர் என்பதால், அதன் எதிர்ப்பு காரணமாக தீர்மானம் தோல்வியடைந்தது.
- பல்வேறு ரஷ்ய அரசு மற்றும் அரசு ஊடக இணையதளங்களில் சைபர் தாக்குதல்கள் நடந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அலுவலகமான கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ இணையதளமான kremlin.ru சனிக்கிழமை செயலிழந்தது.