ஊர் சுற்ற, பியூட்டி பார்லர், ஆடம்பர ஷாப்பிங்க்காக கம்பெனி பணத்தில் ரூ.53 கோடி செலவு செய்தாரா மாதுரி?

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் சில தினங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மாதுரி ஜெயின் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாயை நிறுவன பணத்தில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், தோண்ட தோண்ட பெரும் ஊழல்கள் வெளியாகி வருகின்றது.

இந்த பிரச்சனையானது நாளுக்கு நாள் இன்னும் பெரிதாகிக் கொண்டே தான் உள்ளது.

கூகுள் பே, போன்பே ஆதிக்கம்.. வங்கிகளின் நிலை என்ன.. உதய் கோட்டாக் அதிரடி..!

ஆடம்பர செலவுகள்

ஆடம்பர செலவுகள்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பாரத் பே நிறுவனத்தின் சர்ச்சையில் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவரின் மனைவி தான் மாதுரி ஜெயின். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பாரத்பே நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் நிதியினை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் தணிக்கையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக உயர்தர அழகு பராமரிப்பு, விலை உயர்ந்த மின்னனு சாதனங்கள், வெளி நாடு சுற்றுப் பயணத்திற்காக நிறுவனத்தின் பணத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

சொத்துகள் வாங்கி குவிப்பு

சொத்துகள் வாங்கி குவிப்பு

குறிப்பாக வெளி நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள 1 கோடி ரூபாய்க்கு மேலாக செலவு செய்துள்ளதாகவும் ஆதாரங்கள் சுட்டி காட்டுகின்றன. மொத்தத்தில் நிறுவனத்தின் நிதியினை தவறாக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சொத்துகளை வாங்கியுள்ளதாக அஷ்னீவ மற்றும் மாதுரியிடம் பாரத்பே கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

சர்ச்சை  வெடித்தது.
 

சர்ச்சை வெடித்தது.

நீண்டகால விடுப்பில் சென்றுள்ள அஷ்னீர், இன்னும் அலுவலகம் திரும்பவில்லை, எனினும் இதற்கிடையில் அவரின் மனைவி பிப்ரவரி 22 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் 53 கோடி ரூபாய் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் ஆடை வடிவமைப்பாளரான மாதுரி, அஷ்னீவரின் கீழ் கட்டுப்பாடாளராக பணிபுரிந்த நிலையில், அவரது சகோதரர், இன்னும் சில நெருக்கமான ஊழியர்களிடத்திடலும் விசாரணை நடந்து வருவதாக தகவல் கூறுகின்றன.

மாதுரியின் ட்வீட்

மாதுரியின் ட்வீட்

மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த பங்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு எதிரான ட்வீட் செய்துள்ளார். A&M அறிக்கை ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பியதை பற்றி ஏன் நிறுவனம் வாய் திறக்கவில்லை. இபபோது ஏன் நிறுவனம் அமைதியாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். மொத்தத்தில் இது குறித்த முழுமையான விவரங்கள் முழுமையான விசாரணைக்கு பின்பே தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Did Madhuri jain vacate Rs.53 crore in company money for traveling, beauty parlor and luxury shopping?

Did Madhuri jain vacate Rs.53 crore in company money for traveling, beauty parlor and luxury shopping?/ஊர் சுற்ற, பியூட்டி பார்லர், ஆடம்பர ஷாப்பிங்க்காக கம்பெனி பணத்தில் ரூ.53 கோடி செலவு செய்தாரா மாதுரி?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.