மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“தற்போதைக்கு மக்கள் மீதான அழுத்தத்தை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புகளைப் பார்த்தால், அடுத்த வாரத்திற்குத் தேவையான எரிபொருள் உள்ளது.
சுமார் 35,300 மெட்ரிக் தொன் பெட்ரோல் துறைமுகத்திற்கு வர உள்ளது. அத்துடன், டீசல் கப்பல் நாளை வர உள்ளது.
இந்தப் பின்னணியில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 19 ரூபாவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 17 ரூபாவும் இழப்பதாகக் தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றர் 35 ரூபாயும், மண்ணெண்ணெய் லீற்றர் 63 ரூபாவும் என்ற ரீதியில் நட்டம் ஏற்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.