எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?!

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகப் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் அனைவரும் மத்திய அரசின் எல்ஐசி ஐபிஓ-விற்காக காத்திருக்கும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய அரசு உருவாகியுள்ளது.

எல்ஐசி ஐபிஓ-வில் PMJJBY பாலிசிதாரர்களுக்கு சலுகை கிடையாது.. பெரும் ஏமாற்றம்!

 எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ

இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஐபிஓ மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட்டு சுமார் 65000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த மாபெரும் ஐபிஓ-வில் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை அளிக்க உள்ளது மத்திய அரசு.

 20 சதவீதம்

20 சதவீதம்

நாடாளுமன்றத்தில் எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீதம் வரையிலான பங்குகளைக் கைப்பற்ற அன்னிய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

 முதலீட்டுச் சட்டம்
 

முதலீட்டுச் சட்டம்

தற்போது இருக்கும் சட்டதிட்டங்கள் படி எல்ஐசி நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது. இதற்காக மத்திய அரசு சில நாட்களுக்க முன் அன்னிய முதலீட்டாளர்கள் இந்த எல்ஐசி ஐபிஓ-வில் முதலீடு செய்யத் தடையாக இருந்த முக்கியமான சில விஷயங்களை நீக்க முதலீட்டுச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது மத்திய அரசு.

 மத்திய அரசு

மத்திய அரசு

இந்தியாவில் ஒட்டுமொத்த லைப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் சுமார் 66 சதவீத சந்தையைக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்குச் சிங்கிள் நிறுவனமாகத் தண்ணி காட்டி வரும் எல்ஐசி நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக 5 சதவீத பங்குகளை மோடி அரசு விற்பனை செய்கிறது.

 அன்னிய முதலீட்டாளர்கள்

அன்னிய முதலீட்டாளர்கள்

இந்த 5 சதவீத பங்குகள் மூலம் மத்திய அரசு 62,000 முதல் 65000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை திரட்ட உள்ளது. இந்த மாபெரும் ஐபிஓ மட்டும் கணக்கிட்டால் அன்னிய முதலீட்டாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டு அளவான 20 சதவீதம் வரையில் ஒதுக்கப்படும் பட்சத்தில், எல்ஐசி நிறுவனத்தின் 1 சதவீத பங்குகள் முழுவதுமாக அன்னிய முதலீட்டாளர்கள் கையில் செல்கிறது.

 20 சதவீத ஆதிக்கம்

20 சதவீத ஆதிக்கம்

ஆனால் தற்போது மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக 20 சதவீத பங்குகளைக் கைப்பற்றும் அளவிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஐபிஓ-வில் இந்திய ரீடைல் முதலீட்டாளர்களைக் காட்டிலும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cabinet approves up to 20% stake can acquire by FDI in LIC

Cabinet approves up to 20% stake can acquire by FDI in LIC எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?!

Story first published: Saturday, February 26, 2022, 17:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.