Tamilnadu News Update : கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசகரான இருந்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையாக தற்போது அக்கட்சியில் இருந்துதான் விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அக்கட்சியில் இருந்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இனி அரசியல் வேண்டாம் மக்கள் பணி போதுமானது என்று அரசியலில்ல இருந்து விலகிவிட்டதா தகவல் வெளியானது.
இதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மூத்த அரசியல்வாதியம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசகருமான பழ.கருப்பையாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள பழ.கருப்பையா நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். கட்சியை விட்டு விலகிக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் அரசியலை உங்கள் விருப்பப்படி, உங்களின் போக்குப்படி நடத்துங்கள். என்னுடைய மைதானம் விரிந்து பறந்தது. அதனால் உங்களை விட்டு விலகிச்செல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன் எந்த திருப்தியோ கோபமோ இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய பயணம் மாறுபட்டதில்லை என்னுடைய இலக்கும் மாறுபட்டத்தில்லை ஆனால் நான் ஏறுகின்ற குதிரைகள் வேறுபட்டிருக்கின்றன. அவ்வளவுதான். இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திட்டவிட்டமாக கூறியுள்ளார். தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து சிறு கட்சிகளும் அடிவாங்கி விட்டன.
முன்பெல்லாம் ஒருவர் ஒரு கட்சியின் கொள்கை பிடித்து அக்கட்சியில் இணைவார். தீவிரமாக கட்சி பணி செய்வார். இதன் மூலம் நாடு மாற்றம் பெறும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது இருப்பவர்களுக்கு நாடு மாற்றம் பெறும்என்ற நம்பிக்கை இல்லை எந்த கட்சிக்கும் அழுத்தமான கொள்கை கிடையாது. எல்லா மட்டங்களிலும் பணமே ஆட்சி செய்கின்றன. இதுவே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடிக்கடி கட்சி மாறும் அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக உள்ள பழ.கருப்பையா, காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தி குறித்து புகழ்ந்து பேசியுள்ளதால், அடுத்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“ “