மும்பை
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் காயமடைந்த பறவையை காப்பாற்றி ,அந்த பறவைக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடற்கரை பகுதியில் காயமடைந்து இருந்த பறவையைக் கண்ட சச்சின் உடனடியாக அதன் உயிரைக் காப்பாற்ற முயல்கிறார் . அவர் பறவைக்கு சிறிது தண்ணீர் கொடுத்து பறவையின் உயிரை மீட்க முயற்சி செய்தார் ..பின்னர் அந்த பறவைக்கு உணவளிக்க விரும்பிய சச்சின் ,அங்குள்ள உணவத்திற்கு சென்று அந்த பறவைக்கு உணவளிக்கிறார்.
காயமடைந்த பறவையை காப்பாற்றி உணவளித்த சச்சினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் .இந்த விடியோவை சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . தற்போது 1 லட்சத்திற்கும் மேல் லைக்குக்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.