கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள ராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…ரஷிய அதிபரின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு