கீவ் தெருக்களில் ரஷ்யப் படை.. "ரத்தக் காட்டேறி" படம் போல.. திகில் சண்டை!

கீவ் நகருக்குள் புகுந்துள்ளது ரஷ்ய ராணுவம். தெருக்களில் ரஷ்ய ராணுவத்திற்கும், உக்ரைன் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு முழுவதும் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.

இரவு முழுவதும் சண்டை நடந்த நிலையில் அதிகாலையில் துப்பாக்கிச் சண்டை நின்றது. தலைநகர் முழுவதும் ஒரு விதமான மயான அமைதி நிலவுவதாக ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் ஷெர்பா கூறியுள்ளார். பறவைகளின் சத்தம் கேட்கிறது. அமைதி நிலவுகிறது. சண்டை சற்று ஓய்ந்துள்ளது. ஏதோ ரத்தக் காட்டேறி படம் பார்ப்பது உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

முன்னதாக கீவ் நகரின் மையப் பகுதியில் பெரும் சப்தம் கேட்டதாகவும், அனேகமாக குண்டு வீசித் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் சிலர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். கீவ் நகரில் உக்கிரமான போர் நடப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கீவ் நகரின் வசில்கீவ் பகுதியில் பெரும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

27 பேருக்கு போன் போட்டேன்.. “பயந்தாங்கொள்ளிங்க.. நடுங்கறாங்க” உக்ரைன் புலம்பல்

தெருக்களில் ரஷ்யப் படையினர் புகுந்திருப்பதால் அவர்களை தடுத்த நிறுத்தவும், வீழ்த்தவும் உக்ரைன் படையினரும் துரிதமான பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு கேட்டுள்ளது. மேலும் பால்கனியில் நிற்பதோ, வெளியில் நடமாடுவதோ கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, இதுவரை நடந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுவரை 3500 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 200 பேர் போக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய விமானப்படையின் 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ராணுவத்தின் 102 டாங்குகளையும் அழித்துள்ளோம் என்றார். இருப்பினும் இதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று பிபிசி கூறியுள்ளது. உக்ரைனின் இந்தக் கூற்றை ரஷ்யா நிராகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.