துவாரகா:
குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-
அவர்கள் சிபிஐ, அமலாக்கத்துறை, ஊடகங்கள், காவல்துறை, குண்டர்கள் மற்றும் தினமும் புதிய ஆடைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் முக்கியமில்லை. உண்மைதான் முக்கியம் என்பதை குஜராத் நமக்குக் கற்றுக்கொடுத்தது. மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் எப்போதாவது நல்ல ஆடைகளை அணிந்திருந்தாரா? அமலாக்கத்துறை அல்லது சிபிஐயை தவறாக பயன்படுத்தினாரா? இல்லை. ஏனென்றால் உண்மை எப்போதும் எளிமையானது.
குஜராத் சட்டசபை தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குஜராத் மக்கள் உங்களை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். காங்கிரசுக்குக் கேடு விளைவித்ததை விட குஜராத் மக்களுக்கு பாஜக அதிக கேடு விளைவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபைதேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்… உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நட்பு நாடுகள்- போர் மேலும் தீவிரமடையும்