உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு உணவும், தண்ணீரும் கிடைக்காத சூழல் நிலவுவதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஷைலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறையிடம் அவர் தொலைபேசியில் கூறியதாவது:
“உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்-இல் நாங்கள் தற்போது தங்கியுள்ளோம். இந்திய மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறோம். இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி எங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் தங்கும் இடத்தை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை. உணவு கையிருப்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே உள்ளது. மின்சாரமும், இணையமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM