டொரோன்டோ:கொரோனா பரவலை தடுக்க தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உலகிலேயே முதன் முறையாக கனடா அங்கீகரித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் வாயிலாக உலகிலேயே தாவர தடுப்பூசியை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை கனடா பெற்றுள்ளது.
இது குறித்து கனடா அரசின் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: கனடாவை சேர்ந்த ‘மெடிகாகோ’ நிறுவனம் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 18 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டு ‘டோஸ்’ செலுத்தலாம். இதை 24 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்ததில் 71 சதவீதம் பலன் கிடைப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸால் உடலில் குறையும் புரோட்டீன் அளவை இந்த தடுப்பு மருந்து சமன் செய்கிறது. இந்த தடுப்பு மருந்தில் அமெரிக்காவின் ‘கிளாக்ஸோ ஸ்மித் கிளைன்’ நிறுவன தயாரிப்பான ‘அட்ஜூவன்ட்’ என்ற நோய் எதிர்ப்புக்கான ரசாயன மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement