டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும், புதுக்கோட்டை, தூத்துகுடி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 28.02.2022 முதல் 01.03.2020 வரை தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும் என தெரிவித்துள்ளது.