தங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் இனி தான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.. நிபுணர்களின் பெரும் ட்விஸ்ட்!

தங்கம் விலையானது இனி குறையவே குறையாதா? உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் எப்போது தான் முடிவுக்கு வரும். அதற்குள் தங்கம் விலை அதன் வரலாற்று உச்சத்தினை எல்லாம் உடைத்து எகிறி விடும்போலவே.

சாமானியர்கள் இனி தங்கத்தினை கணவில் தான் நினைக்கணும் போல, அந்தளவுக்கு கடந்த அமர்வில் உச்சம் தொட்டது.

ஆனால் இன்றும் அந்த பதற்றமானது நீடித்து வரும் நிலையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது நீடிக்குமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

உக்ரைன் மீது பொழியும் குண்டு மழை.. போர் பதற்றத்தால் ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு..!

தங்கத்துக்கு ஆதரவளிக்கும்

தங்கத்துக்கு ஆதரவளிக்கும்

தங்கம் விலையை ஊக்கப்படுத்தும் விதமாக ரஷ்யா -உக்ரைன் இடையேயான பதற்றமானது இரண்டாவது நாளாக தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இன்னும் கடுமையான தாக்குதல்கள் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக உக்ரைனின் தலை நகர் கீவ் அருகே பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் படைகள் எதிர்த்து போராடினாலும், ரஷ்யாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருவதையும் பார்க்க முடிகிறது. ஆக ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகின்றது.

இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.இது தொடர்ந்து முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல முனை தாக்குதல்

பல முனை தாக்குதல்

ரஷ்ய அதிபர் இது போர் இல்லை, ராணுவ நடவடிக்கை என்று கூறினாலும், கிழக்கு வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் சுற்றி சுற்றி தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த பகுதிகளில் தான் உக்ரைனின் முக்கிய துறைமுகங்கள், ராணுவ தளவாடங்கள், பொருளாதார நடவடிக்கைக்கான அம்சங்கள், முக்கிய தொழில்நுட்ப நகரங்கள் என திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யாவினை எதிர்த்து போராட உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி அனைத்து பகுதிகளிலும் ரிசர்வ் படையினரும் கட்டாயமாக படை பணிக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களும் சண்டைக்கு அழைக்கபப்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆயுதத்தினை தாங்க வலிமையுள்ள ஒவ்வொருவரும் ரஷ்யாவினை விரட்டியடிக்க இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அச்சத்தில் உக்ரைன் தலை நகர்
 

அச்சத்தில் உக்ரைன் தலை நகர்

இதற்கிடையில உக்ரைன் தலைநகரில் மிகுந்த பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. இது இன்னும் நீடிக்கும் விதமாகவே இருந்து வருகின்றது. நேட்டோ அமைப்பு உக்ரைனுக்கு ஆதரவளித்தாலும், நேட்டோ அமைப்பில் இல்லாத உக்ரைனுக்க்கு படைகளை அனுப்ப முடியாது என கைவிரித்து விட்டது. இது இன்னும் ரஷ்யாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது. மொத்தத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றம் பல கமாடிட்டிகளின் விலையை பல வருடங்களில் இல்லாதளவுக்கு ஊக்குவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

ஏற்கனவே கொரோனாவின் மத்தியில் பல நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், விலைவாசியானது உச்சம் தொட்டு வருகின்றது. பல கமாடிட்டிகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக திரவத் தங்கம் எனப்படும் கச்சா எண்ணெய் விலையானது 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதுவும் பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம்.குறிப்பாக இந்தியா போன்ற அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளை ஊக்குவிக்கலாம். ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலை, தற்போது குறைந்திருந்தாலும் நிச்சயம் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

விநியோக சங்கிலி பாதிப்பு

விநியோக சங்கிலி பாதிப்பு

ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் சர்வதேச அளவிலான விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அலுமினியம், நிக்கல், காப்பர் உள்ளிட்ட மெட்டல்களும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையும், குறிப்பாக பல்லேடியம் நடப்பு ஆண்டில் 28% அதிகரித்துள்ளது. இதே தங்கம் விலையானது 4.5% அதிகரித்துள்ளது.

ஏன் சரிவு?

ஏன் சரிவு?

இப்படி பல்வேறு காரணிகளும் தங்கத்தின் விலை இன்று சரிவினைக் கண்டுள்ளதே ஏன்? என்னதான் பங்கு சந்தைகள் ஏற்றத்தில் இருந்தாலும் மீண்டும் சரியலாம். ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்ட தங்கம் விலையில் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள், இன்று வார இறுதியாதலால் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த சரிவு என்பது தற்காலிகமானதே. ஆக நீண்டகால நோக்கில் முதலீட்டு ரீதியாக தங்கத்திற்கு அதிக தேவை இருப்பதால் இது அதிகரிக்கவே செய்யும். ஆக தங்கம் விலையானது குறையும் போது வாங்கி வைக்கலாம்.

 சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 11 டாலர்கள் குறைந்து, 1915.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் சரிவில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் எந்த அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம்.

 சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் 1.28% சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1% மேலாக குறைந்து, 24.370 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 663 ரூபாய் குறைந்து, 50,880 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையையும் உடைக்கவில்லை. இதன் காரணமாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாறலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 136 ரூபாய் குறைந்து, 64,669 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து, 38,408 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேபோல ஆபரண வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு 7700 ரூபாய் குறைந்து, 65,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பதற்றங்களுக்கு மத்தியிலும், சர்வதேச சந்தையில் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 25th February 2022: gold prices may rise again amid russia – ukraine tension

gold price on 25th February 2022: gold prices may rise again amid russia – ukraine tension/தங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் இனி தான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.. நிபுர்களின் பெரும் ட்விஸ்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.