தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 14ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். அதில் இருந்தே அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
முதலில் சேர்ந்து வாழ மாட்டேன் என்று இருவரும் அடம்பிடித்தார்களாம். அதன் பிறகு அப்பா ரஜினியின் கோபத்தை பார்த்து பயந்து தனுஷுடன் சேர முடிவு செய்தார்
ஐஸ்வர்யா
. ஆனால்
தனுஷ்
தயாராக இல்லை என்பது தெரிந்ததும் மனதை மாற்றிக் கொண்டாராம் ஐஸ்வர்யா.
‘அவரிடம்’ சொன்ன லதா: பெரிய பிரச்சனையில் தனுஷ்?
இந்நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முடிவு நிரந்தரம் அல்ல. அதாவது நிரந்தரமாக சேர அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தற்போதைக்கு சேர்ந்து வாழப் போகிறார்களாம்.
ரஜினியின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது என்றாலும், இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். முன்னதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டபோதும் ரஜினி தான் பேசித் தீர்த்து சேர்த்து வைத்தார்.
ஆனால் அது ரொம்ப காலம் நிலைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதே போன்று முடிவு எடுத்திருக்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும்.
மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக தான் மீண்டும் சேரப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.