ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள் விநியோக திட்டத்துக்கு இன்றியமையா பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.
இணைய தளம் வேலை செய்யவில்லை என்றும் இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும், ஒரு சில பகுதிகளில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்காமல், குடும்ப அட்டை திருப்பி அனுப்புவது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே பரவலான இணைய தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பு இன்று இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு, உரிய கண்காணிப்புடன் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.