தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு போர்கள் அவசியமா இல்லையா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.
Shiva Shankar
மக்களின் போர் உரிமை & நீதிக்கானது. அதற்கு அரசு தலைமை தாங்காது. தேவை முடிந்ததும் மக்களே போரை நிறுத்திக் கொள்வர். ஏகாதிபத்தியங்களின் போர், நிலம், வளங்களின் மீதான ஆசை, அண்டை நாட்டுடனான அகந்தையால் விளைவது. அதில் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
Sudhakar Subramanyan
இருக்கின்ற ஒரு பூமியில் நாடு என்ற ஒன்றே தேவையில்லாதது.
எல்லா உயிர்களும் வாழ வேண்டும்!
Rainbow Times
ஒரு நாட்டிற்கு எல்லைப் பாதுகாப்பு தேவை! ஆனால், போரைப்பற்றியே சிந்திப்பது தவறானது!ஒரு நாட்டின் மக்களின் உழைப்பின் வளத்தை போர் தளவாட கருவிகளின் மூலமாக அழித்தொழிப்பது அறிவீனமானது!ஒரு நாடு இன்னொரு நாட்டைத் தாக்கும்போது பாதிக்கப்படும் அந்நாட்டின் மக்களை மனிதாபிமானத்துடன் எண்ணவேண்டும்!
சக்திகனேஷ்
அடுத்தவன் பேச்சை கேட்டு போரில் ஈடுபடக்கூடாது . அமெரிக்கா நேட்டோ நல்லா தூண்டி விட்டு உக்ரைனை வேடிக்கை மட்டுமே பார்க்குது.
போர் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம் தேவை. 1971 ல் அன்னையார் இந்திரா காந்தி நடத்திய பாகிஸ்தான் போர் தான் இன்று பங்காளதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியது
Abbas Abbas
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மக்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், இராணுவ வீரர்களின் தியாக வாழ்கையும் தவிர போர் முறை அல்ல..
போர் என்பது இயற்கைப் பேரிடர்களை விட ஆபத்தானது, இது மனித இனமே மனிதத்துவத்தை அழிக்கும் ஓர் பயங்கரமான சர்வாதிகாரப் போக்கு.
இது நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியவசியமற்ற ஒன்று…
a_d_o_l_f_kandeeban
நாட்டின் பாதுகாப்பிற்கு போர் அவசியமில்லை ஆனால் போர்படை அவசியம்
thameemul_ansary_1
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அண்டை நாடு செயல்பட்டால் அங்கு போர் தேவைபடுகிறது …….ஆனால் இப்போது நாம் இருக்கின்ற காலகட்டத்தில் பேச்சுவாத்தை நடத்தி போர் ஏற்படுவதை தடுக்க வேண்டும் அதே சிறந்த ஆட்சியாளர்க்களுக்கு சிறப்பு …..இதில் பாதிக்கபடுவது பொதுமக்கள் ,இராணுவப் படை வீரர்கள், அவர்களின் குடும்பம், பொருளாதரம் ……இப்போது போர் தொடங்கிய நிலையில் உலக நாடுகள் தலையிட்டு ஒரு தீர்வு காண வேண்டும்
சமீபத்திய செய்தி: காங்கிரஸ் செய்த அதே தவறைத்தான் பாஜகவும் செய்கிறது! – வாசகர்களின் கமெண்ட்ஸ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM